January 29, 2020

என் மெல்லினமே !!

எத்தனை அழகான அறிமுகம் அது !!
நம்மை பிரித்து நமக்கே முகம் காட்டினர்.
விரல் தொட வளர்ந்து,
இன்று எட்டும் எட்டுகிறாய்.
உன் முத்தத்தின் ஈரத்தில் நனைந்து நிறைந்தது என் உயிர்க்குடம்.
இதற்கென எதையும் துறப்போம் !!
அச்செவ்விதழின் மென்மையில்
மயங்கிக் கிடக்கிறேன்.
தெளிந்து எழ மனமில்லை எனக்கு...

அடை காக்க நான் முயன்றேன்,
நீ ஆனாய் என் பேர் அரணாய்,
இன்று என் தோளுயர தோழனாய் !!

நிகரில்லா உன் குறும்பு,
மூலதனமும், லட்சியமும்
மகிழ்ச்சி மட்டுமே !!
நிற்காமல் பந்தாடும் கண்கள்,
விலக்கில்லா உன் வினா நொடிகள்,
சிலிர்த்து சுவாசமற்றுப் போகிறேன்.
அறியாமையே உன் அழகு,
மெத்தனமும் நீ பழகு.
காந்தம் உன் சிரிப்பு,
ஈர்த்துக்கொள் நல்லிதயங்களை,
பழகிக்கொள் பிடித்ததை,
பகுத்துக்கொள் உன் தேவையை,
துணையாய் தூரம் வரை
என் தாய்மையும்
தித்தித்திருக்கட்டும்,
என் மெல்லினமே !!
பிறந்தநாள் வாழ்த்துகள் !!! 

No comments: