January 03, 2020

அழகிய என் அம்மா

பெண்ணழகு - அது ஓர் அட்சயம்.
என்னழகு - உன் ஆளுமையின்
ஓர் அங்கம்.
அழகிய ஓர் அம்மாவாய்,
ஓர வஞ்சனை இன்றி
உரு கொடுத்தாய், என்னை முழுதாய் ஒப்புக்கொண்டாய்.
ஏழு பருவங்கள் எட்டினேன்,
அதிகம் அணைத்து,
மடிபுரண்டு கொஞ்சியதில்லை, ஆயினும்,
என் ஆயுளின் ஆசீர்வாதம் நீ !
என் காட்சி ஊடகவியலின்,
அழகியல் அறிவானாய் பலமுறை.
எவரையும் தாண்டித்
துணிந்து துணை நின்றாய்.
அசந்து போகிறேன் !!
இன்றும் எனக்கில்லை உன் பலம்.
உன் பிள்ளைகளின் நகளாய்
எனக்கும் இரு பிள்ளைகள்.
எங்களோடு புதிதாய் நீயும்
ஜனித்தாய் மறுமுறை ...
இன்றும் கற்க முயல்கிறேன் -
ஆர்பரிக்காத உன் அழுத்தமான அகிம்சை வழி வளர்ப்பை!

காலத்தின் சக்கரத்தில் நீ முற்களாய்    சுற்றித்திரிகிராய்.
உன்னை சுற்றும் நொடிகளே நான்.
எத்தனை தூரம் கடந்தாலும்
உன்னை சேரும் சில நிமிடங்கள் -
அது எமக்கு சொர்கமே !!
ஏனோ, பொற்காலம் சிலருக்குப்
பெற்றோர் வீட்டிலே,
கடந்து செல்வோம் -
நம் நினைவுகளை
நாமே செய்து சேர்ப்போம்!

No comments: