April 16, 2020

என் தாலாட்டு

ஆரி ...ஆரி ஆரி... ஆரி... ஆரிராரோ!
வட்ட வெண்ணிலவே,
வானம் விட்டு வந்ததிங்கே...
அழகே, பேரழகே,
சந்திரன் தான் வந்ததிங்கே...

தாழம்பூ உன் தேகம்,
மகிழம்பூ உன் மேனி மணம்...
தங்க தட்டதிலே உன் சோறு,
வெள்ளி நிலா விளையாடு...
(ஆரி... )

பளிங்குக் கல் பார்வையிலே,
வெண்குவளை சிவந்திடுமே...
முத்து முத்தாய் உன் பேச்சில்,
முக்குளிசேன் நான் மூச்சடசேன்...
(ஆரி... )

மன்மதனே.. உன் சிரிப்பில்
இம்மண்டலமே மயங்குதடா...
ஊர் மயங்க, உன் ஊன் அசந்து,
விழியுறங்கு என் வள்ளவனே !!
(ஆரி... )

No comments: