
இலையோடு மழைத்துளி கொஞ்சும்,
என் மனதோடு ஏன் இந்த சொர்கம்;
மடியோடு மழலை மொட்டுக்களின் சத்தம்,
என் நெஞ்சோடு ஏக்கத்தின் உச்சம்;
மாலை மலர்ந்த மலரின் மயக்கத்தில்
அதை பறிக்கத் துணிந்தேன்
சற்று சிந்தை கலக்கத்தில்;
பறிக்கத் துணிந்த என் கைகள்
பணிந்து நின்றன . . . ஏன் !
பிரியும் சுமையில், கிளை சிந்திய கண்ணீர் கண்டு,
என் சுவாசத்தை சூழ்ந்த நடுக்கம் காரணமோ . . . !!
No comments:
Post a Comment