October 23, 2008

*** முதல் பயணம் ***

வாசலில் வரிசைகட்டி நின்ற வாகனங்கள்,
கழற்றிய காலணிகள் குவிந்தபடி,
என்னை சூழ்ந்தது உற்றார் உறவினரின் கூச்சல்;
மலர்களின் வாசமும், ஊதுவர்த்தியின் நறுமணமும்
என் மூச்சை முனை முறித்தது...
என்னை அணைத்தபடி,
அனைவரும் என் காதில் ஏதோ முனுமுனுத்தனர்;
அடர்ந்த காட்டில் என் மனம் அலைந்தது . . .
இது என் முடிவை நோக்கிய இருபதாம் ஆண்டின் முதல் பயணம்
– எனது பிறந்தநாள் !!

No comments: