July 27, 2010

நம் நட்புக்காக ஒரே முறை...

எது நம்மை இணைத்தது?
அன்றோர் நாள் நாம் சந்தித்த நவம்பர் மாத நேர்காணலா ?
இருவரும் அன்று ஆசையான கனவுகளோடு ஆரம்பித்த ரயில் பயணமா?
நாம் கொண்ட வீட்டையும், உற்றாரையும், நட்பும், நேசமும்,
படிப்பும், பகையும் போதாதென்று,
புதியதாய் அனுபவம் தேடி பட்டணம் புறப்பட்டோம்.
எத்தனை எத்தனை நினைவுகள்,
பருவ மழை கூட பட்டணத்து மண் பார்த்து,
வீசும் மணம் மாறிய கூத்து !!
நாம் மட்டும் விதி விளக்கல்ல...
சீரோடும் சிறந்த செழிப்போடும், இருக இருக அழுத்தம் கொடுத்து,
நம் அன்னை அவள் மெருகூட்டினால், மெல்லியதாய் நம் மனதை;
அதை நாமாக இரசித்து, முழுதாய் பொத்திவைக்க மறந்து;
பிரித்து பங்கு வைத்து விட்டு, பதறினோம்!!
உன்னால் நான் கெட்டேனோ, என்னால் நீ கெட்டாயோ!!
விரல் விட்டு எண்ணி  விடலாம் - நாம் நமக்காக பரிமாறிய பரவசமான நாட்களை;
வருடம் ஆயினும் இன்றும் நினைக்கிறேன் -
அமைதியாய் அருகில் அமர்ந்து, மௌனமாய் நீ எனக்கு கொடுத்த அமைதியை!!
உறவின் நெருக்கம் எதுவென கண்டேன்!!  

1 comment:

naveen (தமிழமிழ்தம்) said...

யாருமே இந்த வலிகளுக்கு விதிவிலக்கல்ல. நல்ல இருந்துச்சு. இதை கவிதைன்னு சொல்றதோட உடைந்த உரைநடைனு சொல்லலாம், அதுலயும் சிறப்பான ஒன்றுன்னு சொல்லணும். அருமை.